Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபை தொடா்ந்து அநீதியிழைத்து வருவதாகவும் தமக்கான நியாயத்தைப் பெற்றுத் தருமாறும், தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளதென, சங்கத்தின் செயலாளா் எம்.எஸ்.பைறூஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று (21) அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலைக்கு வாகரை ஊடாக பயணிக்கும் தமது பஸ்களின் தொழில் நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில், கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் நிருவாகம் நடந்து கொள்கின்றமை பற்றியும், இதனால் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், மேற்படி மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஏற்கெனவே, குறித்த வீதியில் போதியளவான பஸ்கள் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், குறிப்பிட்ட பயண வழி ஊடாக சேவையில் ஈடுபடும் பொருட்டு, மேலதிகமாக பல பஸ்களுக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரின் சிபாரிசுக்கமைய, கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் அனுமதி வழங்கியுள்ளார்.
“இதனால், ஏற்கெனவே தொழிலில் ஈபடுபட்டுக் கொண்டிருக்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை எழுத்துமூலம் அறிவித்திருந்தோம். அத்தோடு, கிழக்கு மாகாண முதலமைச்சரைச் சந்திந்து பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தியிருந்தோம்.
“ஆயினும், எமக்கு எவ்வித தீர்வுகளும் இதுவரை கிடைக்கவில்லை. இதனாலேயே, மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் நாம் முறைப்பாடு செய்துள்ளோம்” என்றார்.
மேற்படி விடயங்களைக் கேட்டறிந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர், இது தொடர்பில் சுயாதீன விசாரணைக்குழுவொன்றை அமைத்து, அறிக்கை சமா்ப்பிக்குமாறு, செயலாளரைப் பணித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
35 minute ago
1 hours ago
3 hours ago