2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

அதிகாலையில் இருவர் கைது

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

நிந்தவூரிலிருந்து கொண்டு வரப்பட்ட 1,500 லீட்டர் டீசலுடன் இருவர், நேற்று (01) அதிகாலை காரைதீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்கள்.

காரைதீவு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் .எஸ் .ஜெகத் தலைமையிலான குழுவினர் அதிரடியாக அவர்களை அதிகாலை 12 .27 மணியளவில் மடக்கி பிடித்தார்கள்.

காரைதீவு பிரதான வீதி விபுலானந்த சதுக்கத்தில் உள்ள பொலிஸ் சாவடி ஊடாக குறித்த 1,500 லீற்றர் டீசலை ஏற்றிய வாகனம் செல்லுகையில், அதனை நிறுத்தி சோதனை செய்யும் போது, இந்த டீசல் கடத்தல் பிடிபட்டது.

 நிந்தவூரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இருந்து மாளிகைக்காட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் இவ் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X