Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 மே 06 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகாரித்துக் காணப்படும் போதைப் பொருள் விற்பனை மற்றும் அதன் பாவனை என்பவற்றை தடுப்பதற்கு விஷேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.பகீதரன் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை, தைக்காநகர் ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று(05) மாலை நடைபெற்ற, போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர், அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தற்போதைய, காலச் சூழலில் எமது பிரதேசங்களில் போதைப்பொருள் பாவனை என்பது மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இன்று ஆயிரக்கணக்கானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர்.
இந்நிலையில், குறிப்பாக புகை பழக்கம் சிறுபராயத்திலிருந்தே ஆரம்பித்துவிடப்பட்டுள்ளது.. புகைபிடிப்பவர்கள் அந்தப்பழக்கத்திலிருந்து விடுபடுவதென்பது இலகுவான காரியமல்ல.
கிராமங்களில் இடம்பெறுகின்ற சமூக சீர்கேடுகளை பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும். பொலிஸார் அவர்களது கடமைகளை சரிவர நிறைவேற்றுவார்கள், சட்டங்களை மக்கள் கையில் எடுக்காது சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறான, தீய செயல்களில் நாம் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்து நடந்து சமூகத்தில் நற்பிரஜைகளாக மிளிர்வதற்கும் நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டுமென்றார்.
தைக்காநக, பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிந்து அதனைக் கட்டுப்படுத்துவதற்கு, விசேட கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
4 hours ago