Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில், மலேரியா நோய் அபாயம் காணப்படுவதால், மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு, சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் கள உத்தியோகத்தர்களுக்கான மலேரியா விழிப்புணர்வுக் கருத்தரங்கு, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று (23) நடைபெற்றபோதே, அவர் இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் அட்டாளைச்சேனை - 07, 15, 16 ஆகிய பிரிவுகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பூச்சி ஆய்வாளர்களால் மேற்கொண்ட பரிசோதனையின் போது, 29 இடங்களில் மலேரியா நோயை ஏற்படுத்தக் கூடிய 'அனோபிளிஸ்' எனும் ஆபத்தான நுளம்பினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்தார்.
இதேவேளை அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இவ்வகைக் கொடிய நுளம்பினம் கண்டறியப்பட்டுள்ளமை மிகவும் பாரதூரமானதாகுமென்றும் அவர் தெரிவித்தார்.
இந்நாட்டிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முற்றாக ஒழிக்கப்பட்ட மலேரியா நோய், மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளமை கவலைக்குரியதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago