Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 டிசெம்பர் 30 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
போதைப்பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்ட நபர் ஒருவரின் திருமணத்துக்கான சமய அங்கிகாரத்தை அக்கரைப்பற்று ஜூம்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது.
அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதேசத்திற்குள் வசித்து வரும் நபர் ஒருவரின் திருமணத்தை நடாத்தி வைக்குமாறு ஜூம்மா பெரிய பள்ளிவாசலுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த விண்ணப்பத்தை பரிசீலனைக்காக எடுத்துக் கொண்ட ஜூம்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை குறித்த நபர் போதை பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்பட்டவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே, திருமண சடங்கை நிறைவேற்றி வைப்பதை தவிர்த்துள்ளதுடன் குறித்த விண்ணப்பத்தையும் நிராகரித்துள்ளது.
அத்துடன் குறித்த திருமணத்துக்கான மணமகனை போதைப் பொருள் புனர்வாழ்வு மையத்தில் அனுமதிப்பதுடன் அங்கிருந்து நற்சான்றிதழ் பத்திரம் பெற்று மீண்டும் பள்ளிவாசலில் சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
32 minute ago
39 minute ago