2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

அக்கரைப்பற்றில் டெங்கு தீவிரம்

Editorial   / 2022 ஜனவரி 27 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

 அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் கடந்த 25 நாள்களுக்குள் 07 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எப்.எம்.ஏ. காதர், இன்று (27) தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார், டெங்கொழிப்பு செயலணியினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்கள் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சுமார் 500ற்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் பொது இடங்கள் என்பன பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்த 09 நபர்களுக்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றுக்கு சமூகம் கொடுக்காதவர்களுக்கெதிராக நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டவர்கள் ஒரு வார காலத்துக்குள் சுற்றுப் புறச் சூழலை துப்புரவு செய்யுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தும் அதனை மீறியவர்களுக்கெதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெற்றுக் காணிகளை வைத்திருப்போர் ஒரு வார காலத்திற்குள் காணிகளை டெங்கு நுளம்பு பெருகுவதை தடுக்கும் பொருட்டு துப்பரவு செய்ய வேண்டுமெனவும் இதனை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

பொது மக்கள் வாரத்தில் ஒரு நாள் தங்களது வீடுகளையும் சுற்றுப்புறச் சுழலையும் துப்பரவு செய்ய வேண்டுமெனவும், டெங்கொழிப்பு தொடர்பான ஆலோசனைகள் தேவைப்படும் பட்சத்தில் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாமென அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X