Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ். கார்த்திகேசு, சுகிர்தகுமார்
சர்வதேச மனித உரிமை தினத்தில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்படடோரின் உறவினர்களின் அமைப்பால் தமிழ்,முஸ்லிம் உறவுகளால், அம்பாறை மாவட்ட அமைப்பின் எற்பாட்டாளர் தம்பிராசா செல்வராணியின் தலைமையில், அக்கரைப்பற்றில் இன்று (10) காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடத்தப்பட்டது.
அக்கரைப்பற்று பாதிப்பற்ற பெண்கள் அரங்க அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி, அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரம் வரைச் சென்று, மீண்டும் ஆலையடிவேம்பு பிரதான வீதியில் வழியாக வந்து சதோச வர்த்தக நிலையத்துக்கு அருகாமையில் ஒன்று கூடி தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், கணவன் மற்றும் உறவுகளின் பெயர்களை துணிகளில் எழுதி, அதனை கழுத்தில் அணிந்து கொண்டு, சுலோக அட்டைகளை எந்தியவாறு, தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு இருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“இந்த நாட்டில் காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான எமது உறவுகளுக்கு ஒரு பதிலை கூறாது அரசு சர்வதேச மனித உரிமை தினத்தை அனுஷ்ப்பதில் என்ன பலன்கள்.
“இந்த நல்லாட்சி அரசாங்கம் எங்களது கண்ணீருக்கு ஒரு பதிலை கூறுமாறு கோரி வீதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றோம். ஆனால், அரசாங்கம் எங்களுக்கான ஒரு நியாயமான பதிலைக் கூறாது காலம் கடத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றது.
“இன்று வடக்கில் 300 நாட்களை கடந்தும் தாய்மார் வீதிகளில் இருக்கின்றார்கள். இவர்களை தொடர்ந்தும் வீதிகளில் இருக்க வைக்காது, உடனடியாக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். தனது பிள்ளைகள், கணவர்மார் வருவார்கள் என்ற ஏக்கத்தடன் இதுவரை 7 தாய்மார்கள் மரணித்துள்ளனர். இவர்களின் கனவுகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.
“இதேவேளை, சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளையும் விடுதலை செய்து தருமாறும் இந்த நல்லாட்சி அரசியை விரையமாக கேட்டக் கொள்கின்றோம்” என்றனர்.
இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட முன்று பிள்ளைகளின் தாயொருவர் ஊடகங்களுக்கு கருத்து கூறிக்கொண்டு இருந்தவேளை மயக்கமுற்று நிலத்தில் விழுந்த மீண்டு அழுது புலம்பியமை இங்கு கூடியிருந்த அனைவரின் மனங்களையும் வலிக்கச் செய்யது.
இப்பேரணி, மட்டு,அம்பாறை மாவட்ட அசரசார்பற்ற நிறுவனங்களான கல்முனை சமூக சிப்பிகள், அம்பாறை பாதிப்புற்ற பெண்கள் அரங்கம், காரைதீவு மனித அபிவிருத்தி தாபனம், மகாசக்தி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப ஒன்றியம், எப்,ஓ.டி ஆகியவற்றின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago