2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

அகழ்ந்து விடப்பட்ட ஆலையடிவேம்பு ஆற்றுமுகம்

Freelancer   / 2022 ஜூலை 31 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார் 

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் நேற்று (03) அகழ்ந்துவிடப்பட்டது.

வடிச்சல் நீர் அதிகரிப்பு காரணமாக ஆற்றை அண்டிய வயல் பிரதேசங்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து,  களநிலவரத்தை ஆராய்ந்த பின்னரே ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் இந்த தீர்மானத்தை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பிரகாரம் சின்னமுகத்துவார ஆற்றுமுகப்பிரதேசத்தை அகழ்ந்து மேலதிக நீரை வெளியேற்றி வயல் நிலங்களை அறுவடை செய்து விவசாயிகளை பாதுகாக்கும் முகமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X