2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

2019ஆம் ஆண்டுக்கான அரச சேவை உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தின் 2019ஆம் ஆண்டுக்கான அரச சேவை உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பிலான தங்களது மேன்முறையீடுகளை, எதிர்வரும் ஒக்டோபர் 02ஆம் திகதி வரை உத்தியோகத்தர்கள் சமர்ப்பிக்க முடியுமென, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பான, விவரங்கள் அடங்கிய சுற்றுநிருபம், கிழக்கு மாகாணத்திலுள்ள சகல அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், நிறுவனத் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாகாண இடமாற்ற சபையால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசின் அடிப்படையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள், தமது மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியுமெனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலதாமதமாக கிடைக்கப்பெறும் மேன்முறையீடுகள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில், ஒரு நிலையத்தில் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாகச் சேவையாற்றிவருகின்ற அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை, அபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர் சேவை, சாரதிகள் சேவை, அலுவலகப் பணியாளர் சேவை, தொழில்நுட்ப உத்தியோகத்தர் சேவை என்பவற்றைச் சேர்ந்த உத்தியோகத்தர்களே இடமாற்றம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .