Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
J.A. George / 2023 ஜூலை 10 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னம்பிட்டியவில் 11 பயணிகளை பலிகொண்ட பஸ்ஸின் சாரதி, இதற்கு முன்னரும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமைக்காக தண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
குறித்த சாரதி குடிபோதையில் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றாலும், ஆபத்தான மருந்துகளை உட்கொண்டாரா என்பதை அறிய நச்சுயியல் அறிக்கையை பெற்றுக்கொள்ள காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், குறித்த சாரதி அந்தப் பாதையில் தொடர்ந்தும் பயணித்து வரும் நிலையில், குறித்த பாலம் தொடர்பில் அவர் நன்றாக அறிந்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .