2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

’ஜூலை முதல் 3 வாரங்களில் 78 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள்’

J.A. George   / 2021 ஜூன் 23 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு 78 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

வாரத்துக்கு 26 ஆயிரம்  என, ஜூலை மாதத்தின் முதல் 3 வாரங்களில் இந்த தடுப்பூசிகள்  இலங்கை வந்தடையும் என அவர் கூறினார்.

அத்துடன், இந்த வருடத்துக்குள் மொத்தமாக 50 இலட்சம் பைஸர் தடுப்பூசிகளை வழங்க அந்த நிறுவனம் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன்படி, ஜூலை 06ஆம் திகதி  26 ஆயிரம்  பைஸர் தடுப்பூசிகள் இலங்கை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அறிவித்தார்.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரசாங்கத்தால் குறித்த தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X