Editorial / 2020 செப்டெம்பர் 24 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
சேவை பெறுநர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய ஜனாதிபதி நேற்று (23) பிற்பகல் இவ் அலுவலகத்திற்கு சென்றார்.
சேவை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பல தடவைகள் வருகை தந்தபோதும் அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என்பதுடன் போதுமானளவு பணிக்குழாமினர் இல்லை எனக் கூறி அச்சேவை நிறைவேற்றப்படவில்லை என முறைப்பாட்டாளர் தெரிவித்திருந்தார்.
அலுவலகத்தை கண்காணித்த ஜனாதிபதி போதுமானளவு ஊழியர்கள் இருப்பதை கண்டறிந்தார்.
அங்கு சேவை பெற்றுக்கொள்வதற்கு வருகை தந்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்ததைக் கண்ட ஜனாதிபதி, அவரது தேவை மற்றும் விவரங்களை கேட்டறிந்தார்.
அத்துடன், மக்கள் தேவைகளை வினைத்திறனாகவும் குறைவின்றியும் நிறைவேற்றுவது அரச ஊழியர்களின் அடிப்படை பொறுப்பாகுமென ஜனாதிபதி பணிக்குழாமினரிடம் தெரிவித்தார்.
10 minute ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025