2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

சாதாரண சந்தையில் இந்திய முட்டைகள்; அதிர்ச்சி தகவல்

J.A. George   / 2023 ஜூலை 11 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேக்கரிகள் மற்றும் உணவகங்களுக்கு வழங்குவதற்காக மட்டுமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது பொதுச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று(11) காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்தார்.

கடந்த சீசனில், சந்தையில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டதால், முட்டை விலை மிகவும் உயர்ந்தது. இத்தகைய பின்னணியில், இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்தது.

அதன்படி, இந்தியாவில் இருந்து 20 மில்லியனுக்கும் அதிகமான முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன, ஆனால் அவை பேக்கரிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன.

அவர்களுக்கு குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் வழங்கப்பட்டாலும், பேக்கரி பொருட்களின் விலையில் குறிப்பிடத்தக்க குறைப்பு ஏற்படவில்லை.

இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது பொதுச் சந்தையில் விற்பனைக்கு உள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் மேற்பரப்பில் உள்ள அனைத்து தொகுதி எண் அடையாளங்களும் நீக்கப்பட்டு அவை பொது சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

இதேவேளை, அதிகபட்சமாக 46 ரூபாய் என சில்லரை விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும், சந்தையில் ஒரு முட்டை 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X