Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
J.A. George / 2021 ஜூன் 02 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அழகுக் கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவின் சாரதி இன்று(02) கைதுசெய்யப்பட்டார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் முன்னால், வீதியில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
முன்னதாக, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, கொழும்பிலுள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிறந்தநாள் நிகழ்வொன்றை நடத்திய குற்றச்சாட்டின் இலங்கையின் பிரபல அழகு கலை நிபுணரான சந்திம ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (31) கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
அதன்பின்னர், சந்திமால் ஜயசிங்கவை தனது வாகனத்தில் பயணித்த போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறி பயணித்த விதத்தை விமர்சனத்துக்கு உட்படுத்தி சமூக ஊடகங்களில் தகவல்கள் பதிவிடப்பட்டிருந்தாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.
இதற்கமைய போக்குவரத்து பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் பின்னர் குறித்த சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த சாரதி, கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று(02) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தனது தவற்றினை ஏற்றுக்கொண்டதால் 12500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .