Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
J.A. George / 2023 ஜூன் 27 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்சில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் ஆங்கிலத்தில் கேள்வியொன்றை எழுப்ப முடியாமல் தவிப்பதாகத் தோன்றிய போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழில் ஒரு கேள்வியை முன்வைக்கச் சொன்னார்.
பிரான்ஸில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது செயற்பாட்டாளர், ஏனைய விடயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்னர் இலங்கையின் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் அரசாங்கம் ஜனநாயகமானது என்று தான் நம்பவில்லை என்றும் செயற்பாட்டாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, செயற்பாட்டாளர் என்ன கூற முயற்சிக்கின்றார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும், ஆங்கிலம் தெரியாவிட்டால் தமிழில் பேசுமாறும் கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு தமிழ் தெரியும் என்றார்.
பின்னர் குறித்த தமிழ் செயற்பாட்டாளர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
53 minute ago
59 minute ago