2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

சட்டவிரோத தேர்தலை தடுப்போம்: ஜே.வி.பி

George   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் சட்டவிரோதமானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனவரியில் நடைபெறவுள்ள தேர்தல் சட்டவிரோதமானது என்று வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் வேலைத்திட்டமொன்றை, மக்கள் விடுதலை முன்னணி, இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் முன்னெடுத்தது.

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அநுர குமார எம்.பி கூறியதாவது,

'இன்று இந்த நாட்டின் நீதித்துறையில் காணப்படும் சட்ட நடைமுறைகள் அனைத்திலும் ஊழல் காணப்படுகின்றது. நாடாளுமன்ற சட்ட நடவடிக்கைகள் அனைத்திலும் ஊழல் உள்ளது. எமது நாட்டின் நீதி, சட்டம் ஆகிய எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு தாம் விரும்பியபடியே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி செய்கிறார்;.

இன்று நாட்டு மக்களின் விருப்பத்தின்படி அல்ல மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினரின் விருப்பத்தின்படியே இந்த நாட்டின் ஆட்சி நடக்கின்றது.  ராஜபக்ஷ எனும் ஒரு குடும்பத்தின் ஆட்சி மாத்திரமே இங்கு உள்ளது.

இன்று ஒரு பயங்கரமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஊழல் செய்து அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மஹிந்த ராஜபக்ஷ, ஆட்சிக்கு வந்து முதலாவதாக சொன்னது... அரசியலமைப்பை பாதுகாப்பேன் என்று. ஆனால் இன்று, அரசியலமைப்புக்கு முரணாக தேர்தல் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பபட்டுள்ளன.

அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்துக்கு அமைய தற்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்தவொரு தேவையும் இல்லை. இது சட்டவிரோத தேர்தலாகும். அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட முடியாது.

எனவே, இந்த சட்டவிரோதமான தேர்தலுக்கு எதிராக நாங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இதன்படி நாடு முழுவதும் சென்று மக்களுக்கு இதனை தெளிவுபடுத்தவுள்ளோம் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X