2024 நவம்பர் 29, வெள்ளிக்கிழமை

எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினராக நடித்தேன்: தயான் அந்தனி

Menaka Mookandi   / 2012 ஜூலை 27 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}



புகலிட கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள தயான் அந்தனி, கொழும்பிலுள்ள ஊடகங்களுடன் பேசியபோது, தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர் அல்ல என்றும் அவுஸ்திரேலியாவில் புகழிடம் கேட்பதற்காக அவ்வாறு நடித்ததாகவும் கூறினார்.

'நான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் அல்ல. ஆனால் போலி விஸாவில் என்னை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிய முகவர் என்னை விடுதலைப் புலி உறுப்பினர் போல் நடிக்கும்படியும் எல்லோரிடமும் அப்படியே கூறும்படியும் எனக்கு கூறியிருந்தார்' என தயான் அந்தனி கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இவர் பொலிஸாரின் தடுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னரே ஊடகவியலாளர்களைச் சந்தித்து மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், இலங்கை வந்தடைந்ததும் பொலிஸார் இவரை சில மணித்தியாலங்கள் தடுத்து வைத்து வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர் நேற்று மாலை விடுதலை செய்தனர்.

'பொலிஸார் என்னை விசாரித்ததன் பின்னர் பூஸா முகாமுக்கு அனுப்புவர் என நான் நினைத்தேன். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. பொலிஸார் என்னை நல்ல முறையில் நடத்தினர். அவர்கள் என்னை விடுதலை செய்யப்போகின்றனர். நான் மீண்டும் சுதந்திர மனிதன் ஆவேன்' என்று தயான் அந்தனி குறிப்பிட்டார்.

தயான் அந்தனியின் வாக்குமூலத்தை பதிவுசெய்தபின் அவரை தாம் விடுதலை செய்துவிட்டதாக பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X