2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அரசுபோல் எதிர்க்கட்சிகளும் செயற்பட்டால் தனியாக அரசியலில் பயணிப்பேன்: பொன்சேகா

Menaka Mookandi   / 2012 மே 26 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


'இந்த அரசாங்கம் மோசடியான அரசாங்கம் என்பதால். மோசடியற்ற அரசியல் பலத்துடன் இந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாகும். மோசடியற்ற அரசியல் பலத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் அனைவரும் விரும்புவார்களாயின், அவர்களும் இணைந்த அரசியல் பயணத்துக்கு நான் தயார்.

அதற்கு அவர்கள் தயாரில்லையாயின் அவர்களுடன் இணையும் நோக்கம் எனக்கு இல்லை. நான் இந்த பயணத்தை தனியாகச் செல்வேன். அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் வேறுபாடொன்று காணப்படவில்லையாயின் நான் எதிர்க்கட்சியுடன் இணைவதில் அர்த்தம் இல்லை' என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியின் போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வீடியோ காட்சியை இங்கு காணலாம். 


You May Also Like

  Comments - 0

  • Chelliah Premarajah Friday, 01 June 2012 03:36 AM

    இச்செவ்வி ஏன் தமிழில் வெளிவரவில்லை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .