2024 நவம்பர் 29, வெள்ளிக்கிழமை

ஜாதி, மத பேதமில்லை எம்மிடையே…

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 22 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வரலாற்று பழைமை வாய்ந்த நயினாதீவு நாகவிகாரையில் இன்று பௌர்ணமி தினத்தில் விஷேட வழிபாடுகள், ஆராதணைகள் இடம்பெறுகின்றன. அனைத்து இன மக்களும் ஒற்றுமையும் தமது வழிபாடுகளை மேற்கொள்கின்ற புனித தலமாக நயினாதீவு நாகவிகாரை விளங்குகின்றமை சிறப்பானதாகும்.

ஏ9 பாதை திறக்கப்பட்டதன் பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் நயினாதீவுக்கு சென்று வழிபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 2,800 குடும்பங்கள் வசிக்கின்ற இன்ற நயினாதீவில் பெரும்பான்மை ஹிந்துக்களாவர். நயினை நாகபூசணி அம்மனும் இத்தீவில் பிரசித்தமான ஒரு கோயில். இருப்பினும் ஹிந்து, முஸ்லிம், பௌத்தம் என்ற பேதமின்றி அனைவரும் நாகவிகாரையில் பௌர்ணமி தினங்களில் ஒன்றுகூடி வழிபடுகின்றமை சிறப்பானதாகும்.

அந்தவகையில் பௌர்ணமி தினமாகிய இன்றும் சிறப்பு வழிபாடுகள் நயினாதீவு நாகவிகாரையில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த பூஜை வழிபாடுகளை பொதுமக்களுடன் சேர்ந்து கடற்படையினர் ஏற்பாடுசெய்திருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது. Pix: Kushan Pathiraja


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X