2024 நவம்பர் 29, வெள்ளிக்கிழமை

கண்ணிவெடிகளை முற்றாக அகற்ற 10 வருடங்கள் தேவைப்படும்: யாழ். அரச அதிபர்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை முற்றாக அகற்றுவதற்கு குறைந்தது 10 வருடங்களாவது தேவைப்படுமென கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், தமிழ்மிரருக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

உயர்பாதுகாப்பு வலயங்களில் மக்கள் குடியிருப்புகள் புதையுண்டுபோவதாக எழும் குற்றசாட்டுகள் தொடர்பாக, யாழ். அரச அதிபரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். முற்றாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் நடமாட்டத்திற்கு தகுதியுடைய இடம் என, கண்ணிவெடி அகற்றும் நிபுணர்கள் சான்றிதழ் தந்தால் மட்டுமே எங்களினால் மக்களை மீள்குடியேற்ற முடியும். இல்லாத பட்சத்தில் எங்களால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என திருமதி இமெல்டா சுகுமார் மேலும் தெரிவித்தார்.

தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் வழங்கிய செவ்வியின் முழுவடிவம் காணொளியில்...

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X