2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா?

J.A. George   / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள 290 வகையான வாகன இறக்குமதிக்கு இவ்வருட இறுதிக்குள் அனுமதி வழங்குவது என்பது சாத்தியமற்ற ஒன்று என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களுக்கான இறக்குமதி அனுமதி வழங்குவது தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

பிரத்தியேக பாவனைக்காக அல்லாது ஏனைய தேவைகளுக்காக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முன்னதாக, இதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை இவ்வருட இறுதிக்குள் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தாக செய்தி வெளியானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X