Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜனவரி 22 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறைச்சாலைகள் பஸ்ஸில் நேற்று (21) நாடாளுமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் நாடாளுமன்றத்தில் விசேட உரை ஆற்றுவதற்கு முயன்ற போதிலும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
எனினும், மாலை நடைபெற்ற கடற்றொழில் மற்றும் நீரியல்வள சட்ட ஏற்பாடுகள் மீதான விவாதத்தின்போது ரஞ்சன் ராமநாயக்க கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது, ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கோரிய ரஞ்சன் ராமநாயக்க, அவர்களின் குரல் பதிவுகளை தான் வேண்டுமென்றே பகிரங்கப்படுத்தவில்லை எனவும் அச்செயற்பாட்டை தனியார் தொலைக்காட்சியே முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
அரசாங்கம் மறைக்கும் உரையாடல்களும் முறிகள் மோசடியுடன் தொடர்புடைய அலோசியஸ் தன்னுடன் தொலைபேசியில் உரையாடிய குரல் பதிவுகளும் இருப்பதாக ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்தார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குரல் பதிவுகளும் தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .