2024 நவம்பர் 27, புதன்கிழமை

நல்லிணக்கைத்தை ஏற்படுத்தும் திரைப்படத்துக்கு வரவேற்பு

Princiya Dixci   / 2021 ஜூலை 23 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான வடமலை ராஜ்குமாரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட “த சீட்” (THE SEAT ) என்ற விழிப்புணர்வு திரைப்படம், நேற்று முன்தினம் (21) மாலை யூடியூப் தளத்தல் வெளியிடப்பட்டது.

இத்திரைப்படமானது பிரிடிஸ் கவுன்சில் அனுசரனையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டதையடுத்து, ரசிகர்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது.

உள்ளூர் கலைஞர்களையும் தேர்ச்சி பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்களையும் இணைத்து, தற்காலத்துக்கு ஏற்றாற் போல் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், 3 நிமிடமும் 23 நொடிகள் மட்டுமே கொண்டது.

நாம் அன்றாடம் சந்திக்கும் சிக்கல்களை எவ்வாறு கலைந்து, புரிந்துணர்வும் நல்லிணக்கத்துடனும் வாழலாம் என்பதை எளியமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெண்களுக்கான சம அந்தஸ்தும் உரிமையும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தையும் கதாசிரியர் ஆனந்த ரமணன் நிலை நிறுத்தியுள்ளார். 

இத்திரைப்படம் பார்ப்பவர்கள் மத்தியில் இயக்குநரின் எண்ணக்கருவான சமாதானமும் புரிந்துணர்வும் துளிர்விடுவதை உணர முடிகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .