2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: மே 27

Janu   / 2024 மே 27 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1941: ஜேர்மன் யுத்தக் கப்பலான பிஸ்மார்க், அத்திலாந்திக் சமுத்திரத்தின் வடக்கில் மூழ்க்கடிக்கப்பட்டது. 2100 பேர் பலியாகினர்.

1960: துருக்கியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. ஜனாதிபதி செலால் பயாரும் அவரின் அமைச்சர்களும் பதவிநீக்கப்பட்டனர்.

1963: கென்யாவின் முதலாவது பொதுத் தேர்தலில் ஜோமோ கென்யாட்டா தலைமையிலான கட்சி வெற்றியீட்டியது.

1964: இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு காலமானார்.

1967: அவுஸ்திரேலிய பூர்வீக குடிமக்களையும் சனத் தொகைக் கணக்கெடுப்பிற்கு உட்படுத்தி அவர்களுக்கும் நன்மைகள் வழங்குவதற்கான சட்டங்களை ஏற்படுத்துவதற்கு அதிகாரமளிக்கும் சட்டமூலத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலிய மக்கள் வாக்களித்தனர்.

1996: ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சின், செச்னிய தீவிரவாதிகளை  முதல் தடவையாக சந்தித்து யுத்த நிறுத்தம் குறித்து  பேச்சுவார்த்தை நடத்தினார்.

1997: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனுக்கு எதிராக பாலியல் தொந்தரவு வழக்குத் தொடர பௌலா ஜோன்ஸ் எனும் பெண்ணுக்கு  அமெரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

1999: யூகோஸ்லாவிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக் மற்றும் நால்வர் மீது மனித குலத்திற்கு எதிரான மற்றும் போர்க் குற்றம் புரிநத்தாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டது.

2006: இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 6600 பேர் பலி.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .