Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2022 மே 27 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1941: ஜேர்மன் யுத்தக் கப்பலான பிஸ்மார்க், அத்திலாந்திக் சமுத்திரத்தின் வடக்கில் மூழ்க்கடிக்கப்பட்டது. 2100 பேர் பலியாகினர்.
1960: துருக்கியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. ஜனாதிபதி செலால் பயாரும் அவரின் அமைச்சர்களும் பதவிநீக்கப்பட்டனர்.
1963: கென்யாவின் முதலாவது பொதுத் தேர்தலில் ஜோமோ கென்யாட்டா தலைமையிலான கட்சி வெற்றியீட்டியது.
1964: இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு காலமானார்.
1967: அவுஸ்திரேலிய பூர்வீக குடிமக்களையும் சனத் தொகைக் கணக்கெடுப்பிற்கு உட்படுத்தி அவர்களுக்கும் நன்மைகள் வழங்குவதற்கான சட்டங்களை ஏற்படுத்துவதற்கு அதிகாரமளிக்கும் சட்டமூலத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலிய மக்கள் வாக்களித்தனர்.
1996: ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சின், செச்னிய தீவிரவாதிகளை முதல் தடவையாக சந்தித்து யுத்த நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
1997: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனுக்கு எதிராக பாலியல் தொந்தரவு வழக்குத் தொடர பௌலா ஜோன்ஸ் எனும் பெண்ணுக்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
1999: யூகோஸ்லாவிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக் மற்றும் நால்வர் மீது மனித குலத்திற்கு எதிரான மற்றும் போர்க் குற்றம் புரிநத்தாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டது.
2006: இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 6600 பேர் பலி..
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
18 minute ago