2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று : மே 13

Janu   / 2024 மே 13 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1648: டில்லி செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.

1787: அவுஸ்திரேலியாவில் புதிய குடியேற்றமொன்றைஅமைப்பதற்காக இங்கிலாந்திலிருந்து குற்றவாளிக் கைதிகளைக் கொண்ட 11 கப்பல்களுடன் கப்டன் ஆர்தர் பிலிப் புறப்பட்டார்.

1846: மெக்ஸிகோ மீது அமெரிக்கா போர்ப் பிரகடனம் செய்தது.

1912: பிரித்தானிய விமானப்படை ஸ்தாபிக்கப்பட்டது.

1917: போர்த்துக்கலில் பாத்திமா மாதா தமக்கு காட்சியளித்ததாக 3 சிறுமிகள் அறிவித்தனர்.

1939: அமெரிக்காவில் முதலாவது வர்த்தக எவ்.எம். வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

1940: பிரான்ஸை ஜேர்மனியப் படைகள் வெற்றிகொள்ளத் தொடங்கின.

1940: ஜேர்மனியின் படையெடுப்பின் காரணமாக நெதர்லாந்து ராணி வில்ஹெல்மினா பிரட்டனுக்கு தப்பிச் சென்றார்.

1942: இந்திய நாடாளுமன்ற ராஜ்ய சபாவின் முதல் அமர்வு நடைபெற்றது.

1967: கலாநிதி ஸாகிர் ஹூஸைன் இந்தியாவின் 3 ஆவது ஜனாதிபதியானார். இந்தியாவின் முதல் முஸ்லிம் ஜனாதிபதி இவராவார்.

1972: ஜப்பானின் ஒசாகா நகரில்  மின்சார கோளாறு காரணமாக ஏற்பட்ட தீயினால் 118 பேர் பலி.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .