Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Janu / 2024 மே 01 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
900 : ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் ஸ்கொஃபீல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 200 பேர் உயிரிழந்தனர்.
1915 : லூசித்தானியா என்ற கப்பல் தனது 202 ஆவதும் கடைசியுமான பயணத்தை நியூயோர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இது புறப்பட்ட ஆறாவது நாள் அயர்லாந்துக் கரைக்கருகில் மூழ்கியதில் 1,198 பேர் உயிரிழந்தனர்.
1919: ஜேர்மனியப் படைகள் பவேரிய சோவியத் குடியரசை அழிக்கும் பொருட்டு மியூனிக் நகரினுள் நுழைந்தன.
1925 : சீனாவில் அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று 134 மில்லியன் உறுப்பினர்களுடன் உள்ள உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் ஆகும்.
1929 : 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஈரான்–துருக்மெனிஸ்தான் எல்லையைத் தாக்கியதில் 3,800 பேர் உயிரிழந்தனர். 1,121 பேர் காயமடைந்தனர்.
1930 : குறுங்கோள் புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1931 : நியூயோர்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.
1940 : கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக நிறுத்தப்பட்டன.
1941 : இரண்டாம் உலகப் போர் - ஜேர்மனியப் படை துப்ருக் முற்றுகையை ஆரம்பித்தது.
1944 : இரண்டாம் உலகப் போர் - 200 கம்யூனிசக் கைதிகள் ஏதென்சில் நாட்சிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1945 : இரண்டாம் உலகப் போர் - ஹிட்லர் இறந்ததை செருமனியின் செய்தி வாசிப்பவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
1945 : இரண்டாம் உலகப் போர் - சோவியத் இராணுவத்தினர் பெர்லினில் நாடாளுமன்றக் கட்டிடத்தில் சோவியத் கொடியை ஏற்றினார்கள்.
1945 : இரண்டாம் உலகப் போர் - நாட்சி பரப்புரை அமைச்சர் ஜோசப் கோயபெல்ஸ், அவரது மனைவி மேக்டா பியூரர் பதுங்கு அறைக்கு வெளியே தற்கொலை செய்து கொண்டனர். இவர்களது பிள்ளைகளும் தாயினால் சயனைடு பருக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலக அளவில் கொண்டாடப்படும் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago