2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: மார்ச் 29

R.Tharaniya   / 2025 மார்ச் 29 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

1549: பிரேஸிலின் முதலாவது தலைநகரமான சல்வடோ டா பாஹியா ஸ்தாபிக்கப்பட்டது.

1632: ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கியூபெக் கைமாறியது.

1792: 13 நாட்களுக்கு முன்னால் சுடப்பட்ட சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னன் உயிரிழந்தான்.

1807: 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை ஜெர்மானிய வானியலாளர் ஹைன்ரிக் ஓல்பர்ஸ் கண்டுபிடித்தார்.

1831: துருக்கிக்கு எதிராக பொஸ்னிய எழுச்சி ஆரம்பமானது.

1849: பஞ்சாபை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது.

1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.

1867: கனடாக் கூட்டமைப்பை ஜூலை 1இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார்.

1879: ஆங்கிலோ - சூலு போர் - தென்னாபிரிக்காவில் கம்பூலா என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் 20,000 சூலுக்களை வென்றனர்.

1886: ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பாவர் முதல் தொகுதி கொக்காக்கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.

1945: இரண்டாம் உலகப் போர்: வி - 1 பறக்கும் குண்டு கடைசித் தடவையாக இங்கிலாந்தைத் தாக்கியது.

1971: வியட்நாமில் மைலாய் கிராமத்தில் சுமார் 500 பேரை கொன்ற விவகாரத்தல் அமெரிக்க இராணுவ லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றான்.

1973: தென்வியட்நாமிலிருந்து அமெரிக்காவின் கடைசி சிப்பாய் வெளியேறினார்.

1974: நாசாவின் மரைனர் 10 விண்கலம் புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.

1982: தெலுங்கு தேசம் கட்சி, என்.டி.ராமராவினால் ஆரம்பிக்கப்பட்டது.

2004:  மதுபான நிலையங்கள், உணவுவிடுதிகள், வேலைத்தளங்கள் ஆகியவற்றில் புகைப்பிடிப்பதை தடைசெய்த முதலாவது நாடாகியது அயர்லாந்து.

2004: பல்கேரியா, எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, ருமேனியா, சிலவாக்கியா, சிலொவேனியா ஆகியன நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன.

2005: யாஹூ! 360° சேவை ஆரம்பிக்கப்பட்டது.

2007: கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு, தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.

2008: பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X