2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று : மார்ச் 28

Janu   / 2024 மார்ச் 28 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1910 : கடல் - விமானம் ஒன்றில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்சைச் சேர்ந்த என்றி பாப்ரி என்பவர் பெற்றார்.

1930 : கொன்ஸ்டன்டீனபில், ஹங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் ஹங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன.

1933 : இம்பீரியல் ஏர்வேய்சு வானூர்தியில் பயணி ஒருவர் தீ மூட்டியதால் விமானம் விபத்துக்குள்ளாகியதில் பயணம் செய்த அனைத்து 15 பேரும் உயிரிழந்தனர்.

1939 : எஸ்பானிய உள்நாட்டுப் போர் – மூன்று நாள் முற்றுகையை அடுத்து மத்ரித் நகரை தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ கைப்பற்றினார்.

1959 : சீன மக்கள் குடியரசின் அரச மன்றம் திபெத்து அரசைக் கலைத்தது.

1970 : மேற்கு துருக்கியை நிலநடுக்கம் தாக்கியதில் 1,086 பேர் உயிரிழந்தனர்.

1979 : ஐக்கிய அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையிலுள்ள மிடில்டன் நகரில் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.

1988 : ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில், சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.

1994 : தென்னாபிரிக்காவில் சூலு இனத்தவர்களுக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஜோகார்னஸ்பேக் நகரில் இடம்பெற்ற கைகலப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

2005 : இந்தோனேசியாவின் சுமாத்திராவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 915 முதல் 1,314 பேர் வரையானோர் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .