Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 13 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
1900 : இரண்டாம் பூவர் போர் - பிரித்தானியப் படைகள் ஓரஞ்சு விடுதலை இராச்சியத்தின் புளும்பொன்டின் நகரைக் கைப்பற்றினர்.
1900 : பிரான்சில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.
1908 : நெல்லைக்கு வந்த வ.உ.சி.இ சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டதால், திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது. நால்வர் கொல்லப்பட்டனர்.
1921 : மங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.
1930 : புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்ட செய்தி ஆர்வர்டு கல்லூரி வான்காணகத்துக்கு தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது.
1933 : பெரும் பொருளியல் வீழ்ச்சி - அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் கட்டாய 'வங்கி விடுமுறையை' அறிவித்ததை அடுத்து அமெரிக்க வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
1940 : இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உதம் சிங் லண்டனில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் ஒ'டுவையர் என்பவரை சுட்டுக் கொன்றார்.
1940 : ரஷ்ய - பின்லாந்து குளிர்காலப் போர் முடிவுக்கு வந்தது.
1943 : பெரும் இன அழிப்பு - ஜேர்மனியப் படைகள், போலந்தின் யூதக் குடியேற்றங்களை அழித்தனர்.
1954 : முதலாம் இந்தோசீனப் போர் - வோ இங்குயென் கியாப் தலைமையிலான வியட் மின் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தாக்கினர்.
1957 : கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவைக் கொல்ல மாணவப் புரட்சிவாதிகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
1969 : அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது.
1979 : கிரெனடாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி ஒன்றில் அதன் பிரதமர் எரிக் கெய்ரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1988 : உலகின் மிக நீளமான கடலடி சுரங்கம், செய்க்கான் சுரங்கம், ஜப்பானில் கட்டி முடிக்கப்பட்டது.
1992 : கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 498 பேர் உயிரிழந்தனர்.
1996 : இஸ்க்காட்லாந்து, டன்பிளேன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 16 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
1997 : இந்தியாவின் பிறரன்பின் பணியாளர்கள் சபை அதன் தலைவர் அன்னை தெரேசாவின் இடத்துக்கு நிர்மலா ஜோஷியைத் தேர்ந்தெடுத்தது.
2003 : இத்தாலியில் 350,000 - ஆண்டு பழமையான மனித அடிச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேச்சர் இதழ் அறிவித்தது.
2007 : 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமானது.
2008 : தங்கத்தின் விலை நியூயார்க்கில் முதல் தடவையாக அவுன்சுக்கு 1,000 ஐ தாண்டியது.
2012 : சுவிட்சர்லாந்தில் சுரங்கம் ஒன்றில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில், 28 பேர் உயிரிழந்தனர்.
2013 : திருத்தந்தை பிரான்சிஸ் 266ஆவது திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016 : அங்காராவின் மத்திய பகுதியில், குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டதில், 37 பேர் கொல்லப்பட்டனர். 127 பேர் காயமடைந்தனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago