2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: மார்ச் 10

R.Tharaniya   / 2025 மார்ச் 10 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

1629: இங்கிலாந்து மன்னன் 2 ஆம் சார்ள்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு ஆட்சியை தனது சுய கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஆரம்பித்தான். இந்நிலை 11 வருடகாலம் நீடித்தது.

1876: அலெக்ஸாண்டர் கிறஹம் பெல் முதலாவது வெற்றிகரமான தொலை அழைப்பை மேற்கொண்டார்.

1906: பிரான்ஸில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் 1099 பேர் பலியாகினர்.

1922: பிரித்தானிய ஆட்சியாளர்களால் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். 2 வருங்களின் பின்னரே அவர் விடுவிக்கப்பட்டார்.

1933: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 115 பேர் பலி.

1945: 2 ஆம் உலகப் போரின் போது அமெரிக்க விமானங்கள் ஜப்பானிய பாரிய குண்டுத்தாக்குதல்களை நடத்தின. இதனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்களாவர்.

1959: திபெத்தில் தலாய் லாமா சீனப்படைகளால் கைது செய்யப்படலாம் எனக் கருதப்பட்டதால் அவரை சூழ 3 லட்சம் திபெத்தியர்கள் அரணாக திரண்டனர்.

1969: அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்கை கொன்றவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X