Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Mithuna / 2024 பெப்ரவரி 29 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1704: பிரெஞ்சுப் படைகளும் ஐக்கிய அமெரிக்காவின் பழங்குடி இந்தியர்களும் இணைந்து மசாசுசெட்ஸ் இல் டியர்ஃபீல்ட் என்ற இடத்தில் ஆங்கிலக் குடியேறிகளைத் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100பேர் கொல்லப்பட்டனர்.
1712: சுவீடனில், சுவீடன் நாட்காட்டியில் இருந்து ஜூலியன் நாட்காட்டிக்கு மாறுவதற்காக பெப்ரவரி 29ஆம் நாளுக்குப் பின்னர் பெப்ரவரி 30ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1896: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்தநாள். இவர் 1995இல் உயிரிழந்தார்.
1904: பிரபல பரதநாட்டியக் கலைஞர் ருக்மணி தேவி அருண்டேல், பிறந்ததினம். அவர் 1986இல் உயிரிழந்தார்.
1940: பின்லாந்து குளிர்காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதி முயற்சிகளில் இறங்கியது.
1944: இரண்டாம் உலகப் போர்: ஆட்மிரால்ட்டி தீவுகள் ஐக்கிய அமெரிக்காவினால் முற்றுகைக்குள்ளாகியது.
1960: மொரொக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1972: வியட்நாம் போர்: தென் கொரியா தனது மொத்தமுள்ள 48,000 படையினரில் 11,000 பேரை வியட்நாமில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது.
1988: தென்னாபிரிக்காவின் ஆயர் டெஸ்மண்ட் டூட்டு உட்பட 100 மதகுருமார் கேப் டவுன் நகரில் கைது செய்யப்பட்டனர்.
1996: பெரு விமானம் ஒன்று அண்டெஸ் மலையில் மோதியதில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
2004: தென்னாப்பிரிக்காவின் துடுப்பாட்ட வீரர் லோரி வில்மோட் உயிரிழந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago