Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
R.Tharaniya / 2025 பெப்ரவரி 27 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
1560 – ஸ்கொட்லாந்தில் இருந்து பிரெஞ்சுக்காரரை வெளியேற்ற ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் பேர்விக் உடன்பாடு எட்டப்பட்டது.
1594 – பிரான்சின் மன்னனாக நான்காம் ஹென்றி முடிசூடினான்.
1700 – புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
1801 – வொஷிங்டன், டிசி நகரம் அமெரிக்க காங்கிரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.
1844 – டொமினிக்கன் குடியரசு ஹெயிட்டியிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1861 – போலந்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்து வார்சாவில் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தினர்.
1879 – சக்கரீன் என்ற செயற்கை இனிப்பூட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
1900 – பிரித்தானிய தொழிற் கட்சி அமைக்கப்பட்டது.
1933 – பெர்லினில் ஜேர்மனியின் நாடாளுமன்றம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜாவா கடலில் இடம்பெற்ற சமரில் கூட்டுப் படைகளை ஜப்பான் படைகள் தோற்கடித்தன.
1951 – ஐக்கிய அமெரிக்காவில் அதிபர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.
1967 – டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1976 – முன்னாள் ஸ்பானிய நாடான மேற்கு சகாரா சாராவி அரபு ஜனநாயகக் குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்தது.
1991 – வளைகுடாப் போர்: அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ.புஷ், குவைத் விடுதலையானதாக அறிவித்தார்.
2004 – பிலிப்பைன்சில் பயணிகள் கப்பலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 116 பேர் கொல்லப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago