Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 பெப்ரவரி 25 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1921: ஜோர்ஜிய குடியரசின் ரிபிலிசி நகரம் ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்டது.
1928: அமெரிக்க மத்திய வானொலி ஆணைக்குழுவிடமிருந்து முதலாவது தொலைக்காட்சி அனுமதிப்பத்திரத்தை வாஷிங்டன் டி.சி. நகர சார்ள்ஸ் டிக்கின்ஸ் ஆய்வுகூடம் பெற்றுக்கொண்டது.
1932: ஜேர்மன் பிரஜாவுரிமையை அடோல்வ் ஹிட்லர் பெற்றுக்கொண்டார். இதன்மூலம் 1932 ஆம் ஆண்டில் நடந்த நாட்டின் தலைவர் தேர்தல் போட்டியிட அவர் தகுதி பெற்றார்.
1933: விமானங்களை காவுவதற்காக பிரத்தியேகமாக அமெரிக்காவில் நிர்மாணிக்கப்பட்ட கப்பலான யூ.எஸ்.எஸ்.ரேஞ்சர் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1945: ஜேர்மனிக்கு எதிராக துருக்கி யுத்தப்பிரகடணம் செய்தது.
1948: செக்கஸ்லோவாக்கியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.
1951: முதலாவது பான் அமெரிக்க விளையாட்டுப் போட்டி ஆர்ஜென்டீனாவில் நடைபெற்றது.
1954: எகிப்தில் கமால் அப்துல் நாசர் பிரதமரானார்.
1980: பிலிப்பைன்ஸில் 20 வருடகாலமாக ஜனாதிபதியாக பதவி வகித்த பேர்டினன்ட் மார்கோஸ் நாட்டைவிட்டு தப்பிச்சென்றார். கொரஸோன் அக்குய்னோ அந்நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவானர்.
1991: வளைகுடா யுத்தத்தின்போது, சவூதி அரோபியாவிலுள்ள அமெரிக்க படைத்தளமொன்றின்போது ஈராக்கின் ஸ்கட் ஏவுகணை தாக்கியதால் 28 அமெரிக்கப் படையினர் பலி.
1992: வார்ஸோ உடன்படிக்கை இரத்துச்செய்யப்பட்டது.
2009: பங்களாதேஷில் எல்லைக்காவல் படையினர் அவர்களின் தலைமையகத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் 50 இராணுவ அதிகாரிகள் உட்பட 74 பேர் பலி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .