2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 21

S. Shivany   / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

1613 – முதலாம் மிக்கையில் உருசியப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரொமானொவ் அரச வம்சம் ஆரம்பமானது.

1803 – கண்டி மீது பிரித்தானியர் போர் தொடுத்தனர்.

1804 – நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

1808 – உருசியப் படை பின்லாந்து எல்லையைத் தாண்டி சுவீடனை அடைந்தது. பின்லாந்துப் போர் ஆரம்பமானது. இப்போரில் சுவீடன் பின்லாந்தை உருசியாவுக்கு இழந்தது.

1842 – தையல் இயந்திரத்துக்கான 1-வது அமெரிக்கக் காப்புரிமத்தை யோன் கிரீனா பெற்றார்.

1848 – கார்ல் மார்க்சும் பிரெட்ரிக் எங்கெல்சும் பொதுவுடைமை அறிக்கையை வெளியிட்டனர்.

1878 – முதலாவது தொலைபேசி விபரக்கொத்து அமெரிக்காவில் கனெடிகட்டில் வெளியிடப்பட்டது.

1885 – வாசிங்டன் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது.

1907 – நெதர்லாந்தில் பெர்லின் என்ற கப்பல் மூழ்கியதில் 125 பேர் உயிரிழந்தனர்.

1919 – ஜேர்மனிய சோசலிசவாதி கூர்ட் ஐசுனர் கொல்லப்பட்டார்.

1921 – ஈரானில் இடம்பெற்ற புரட்சியில் ரெசா ஷா தெகுரானைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போரில் வெளிநாட்டு தேசிய தன்னார்வலர்களை உலக நாடுகள் சங்கம் தடை செய்தது.

1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டையின் போது, ஜப்பானிய கமிக்காசு வானூர்திகள் அமெரிக்காவின் பிசுமார்க் சீ என்ற கப்பலைத் தாக்கி மூழ்கடித்தன. சரட்டோகா கப்பல் சேதமடைந்தது.

1945 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய முனையில் பிரேசிலியஷஜ படைகள் செருமனியப் படைகளை மொண்டே காசுட்டெல்லோ சமரில் தோற்கடித்தன.

1947 – எட்வின் லாண்ட் பொலராய்டு என்ற முதலாவது உடனடி படம்பிடிகருவியை நியூயோர்க் நகரில் காட்சிப்படுத்தினார்.

1952 – வின்ஸ்டன் சர்ச்சிலின் பிரித்தானிய அரசு ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் அடையாள அட்டை முறையை நீக்கியது.1960 – பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்.

1965 – மல்கம் எக்ஸ் நியூயோர்க் நகரில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1972 – சீன-அமெரிக்க உறவுகளை சீர் செய்யும் பொருட்டு அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் சீனா சென்றார்.

1972 – சோவியத்தின் ஆளில்லா லூனா 20 சந்திரனில் இறங்கியது.

1973 – சினாய் பாலைவனத்தில் இசுரேல் போர் விமானம் லிபியாவின் பயணிகள் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.

1974 – சூயெஸ் கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து கடைசி இசுரேலியப் படைகள் வெளியேறின.

1995 – சுட்டீவ் பொசெட் என்பவர் அமைதிப் பெருங்கடலின் குறுக்கே வெப்பக்காற்று வாயுக்கூண்டில் பயணம் செய்த முதல் மனிதராக கனடாவின் லீடர் நகரில் தரையிறங்கினார்.

2013 – 2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள்: இந்தியாவின் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 20 மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .