Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 08 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
1238 – மங்கோலியர்கள் உருசிய நகரான விளாதிமிரை தீயிட்டுக் கொளுத்தினர்.
1347 – பைசாந்திய உள்நாட்டுப் போர் 1341–47 முடிவுக்கு வந்தது.
1587 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டார்.
1601 – முதலாம் எலிசபெத் மகாராணிக்கு எதிராக எசெக்சின் இரண்டாம் பிரபு இராபர்ட் டெவெரோ கிளர்ச்சியில் ஈடுபட்டார். இது விரைந்து அடக்கப்பட்டது.
1785 – வாரன் ஏசுடிங்சு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பிரித்தானிய இந்தியத் தலைமை ஆளுநர் பதவியைத் துறந்தார்.
1817 – லாசு எராசு தனது படையுடன் அந்தீசு மலையைக் கடந்து சான் மார்ட்டினுடன் இணைந்து சிலியை எசுப்பானியாவிடம் இருந்து விடுவித்தார்.
1879 – சிட்னி துடுப்பாட்ட ஆட்டம் ஒன்றில் இடம்பெற்ற கலவரம் ஒன்றில் ஜார்ஜ் ஹரீஸ் தலைமையிலான இங்கிலாந்து துடுப்பாட்ட அணி கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டது.
1885 – முதலாவது அரச-ஆதரவுடனான சப்பானியக் குடியேற்றம் அவாயில் ஆரம்பமானது.
1904 – அச்சே போர்: டச்சு குடியேற்ற இராணுவம் வடக்கு சுமாத்திராவின் பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் படை நடவடிக்கையை ஆரம்பித்தது. இது அங்கு இனப்படுகொலையில் முடிந்தது.
1904 – ஜப்பானியரின் நீர்மூழ்கிக் குண்டு ஒன்று சீனாவின் லூசென்கோ நகரைத் தாக்கியது. உருசிய-ஜப்பானியப் போர் ஆரம்பமானது.
1924 – ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் சிங்கப்பூரை ஊடுருவியது.
1942 – இரண்டாம் உலகப் போர்: டச்சு இராணுவத்தினர் இந்தோனேசியாவின் பஞ்சார்மாசின் நகரை சப்பானியர் கைப்பற்றுவதைத் தடுக்க அந்நகரை தீயிட்டுக் கொளுத்தினர்.
1942 – ஜேர்மனிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி செருமனியில் இருந்து தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவும் கனடாவும் ரைன் ஆற்றின் மேற்குக் கரையைக் கைப்பற்றும் நோக்குடன் வெரிடபிள் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: மிக்கைல் தெவித்தாயெவ் தலைமையில் பத்து சோவியத் கைதிகள் செருமனிய நாட்சி வதைமுகாம் ஒன்றில் இருந்து விமானம் ஒன்றைக் கடத்தித் தப்பினர்.
1955 – பாகிஸ்;தானின் சிந்து மாகாண அரசு நில மானிய முறைமையை ஒழித்தது.
1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் என களனி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
1960 – இரண்டாம் எலிசபெத் மகாராணி விடுத்த அறிவிப்பு ஒன்றில், அவரும் அவரது குடும்பமும் வின்சர் மாளிகை என அழைக்கப்படுவர் எனவும், அவரது வழித்தோன்றல்கள் மவுன்ட்பேட்டன்-வின்சர் என அழைக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.
1963 – அமெரிக்க குடிமக்கள் கியூபாவுக்கு செல்வது, மற்றும் கியூபாவுடன் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியன சட்டவிரோதம் என ஜான் எஃப். கென்னடியின் நிருவாகம் அறிவித்தது.
1963 – ஈராக்கில் அப்து அல்-கரீம் காசிம் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.
1965 – அமெரிக்காவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்சு விமானம் அத்திலாந்திக் பெருங்கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 84 பேரும் உயிரிழந்தனர்.
1971 – நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
1974 – 84 நாட்கள் விண்ணில் பயணம் செய்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.
1974 – மேல் வோல்ட்டாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1981 – கிரேக்கத்தில் 21 கால்பந்து விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 21 பார்வையாளர்கள் உயிரிழந்தனர், 55 பேர் காயமடைந்தனர்.
1983 – ஆத்திரேலியாவின் மெல்பேர்ண் நகரைப் பெரும் புழுதிப் புயல் தாக்கியதில், 320 மீட்டர் புழுதி மேகம் நகரில் தோன்றியது.
1986 – கனடாவின் இண்டன் நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 23 பேர் உயிரிழந்தனர்.
1989 – போர்த்துக்கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில் மோதியதில் 144 பேர் இறந்தனர்.
2005 – இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன.
2005 – ஈழப் போர்: முதல் நாள் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த இலங்கைத் தமிழ் அரசியல்வாதி அரியநாயகம் சந்திரநேரு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
2010 – ஆப்கானித்தானின் இந்து குஷ் மலைகளில் இடம்பெற்ற தொடர் பனிச்சரிவுகளில் சிக்கி 172 பேர் உயிரிழந்தனர்.
2014 – மதீனாவில் உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 15 எகிப்தியர்கள் உயிரிழந்தனர், 130 பேர் காயமடைந்தனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
34 minute ago
41 minute ago