Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 03 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
1509 – இந்தியாவில் தியூ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உதுமானிய, வெனிசு, குசராத்து, சமோரின் கூட்டுப் படைகளை போர்த்துக்கீசக் கடற்படை வென்றது.
1661 – மரதப் படைகள் பேரரசர் சிவாஜியின் தலைமையில் முகலாயப் படைகளை வென்றது.
1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நாணயத்தாள் மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1706 – புரோஸ்டட் போரில் சுவீடன் படை சாக்சனி-போலந்து- உருசியக் கூட்டுப் படைகளை இரட்டை சுற்றி வளைப்பு உத்தியைப் பயன்படுத்தி வென்றது.
1781 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படை இடச்சின் கட்டுப்பாட்டில் இருந்த சின்டு யுசுடாசியசு என்ற கரிபியன் தீவைக் கைப்பற்றியது.
1783 – ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை எசுப்பானியா அங்கீகரித்தது.
1807 – பிரித்தானியப் படை சர் சாமுவேல் ஓசுமுட்டி தலைமையில் மொண்டேவீடியோவைக் (இன்றைய உருகுவேயின் தலைநகர்) கைப்பற்றியது.
1830 – கிரேக்கம் உதுமானியப் பேரரசிடம் இருந்து கிரேக்கம் முழுமையாக விடுதலை அடைவதற்கு ஏதுவான உடன்பாடு இலண்டனில் எட்டப்பட்டது.
1870 – ஐக்கிய அமெரிக்காவில் அனைத்து இன ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
1876 – பராகுவே ஆர்ஜெண்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
1870 – ஐக்கிய அமெரிக்காவில் அனைத்து இன ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
1894 – யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
1913 – ஐக்கிய அமெரிக்காவில் வருமான வரி அறவிடும் உரிமை நடுவண் அரசுக்கு வழங்கப்பட்டது.
1916 – கனடாவில் ஓட்டாவாவில் நாடாளுமன்றத்தின் மைய வளாகக் கட்டடம் தீயினால் அழிந்தது. ஏழு பேர் உயிரிழந்தனர்.
1930 – பிரித்தானிய ஆங்காங்கின் கவுலூனில் இடம்பெற்ற மாநாட்டில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1931 – நியூசிலாந்தில் நேப்பியர் என்ற இடத்தில் இடம்பெற்ற 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 258 பேர் உயிரிழந்தனர்.
1943 – டோர்செசுடர் என்ற அமெரிக்கக் கப்பல் செருமனியின் நீர்மூழ்கியினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதில், 902 பேரில் 230 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க இராணுவ, கடற்படைகள் ஜப்பானிடம் இருந்து மார்சல் தீவுகளைக் கைப்பற்றின.
1945 – இரண்டாம் உலகப் போர்: மணிலா நகரை சப்பானிடம் இருந்து கைப்பற்ற அமெரிக்காவும் பிலிப்பீன்சும் ஒரு மாதம் நீடித்த போரைத் தொடங்கின.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 1,000 விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசின. 2,500 முதல் 3,000 வரையானோர் கொல்லப்பட்டனர்.
1966 – சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.
1969 – யாசர் அரபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராகத் தெரிவானார்.
1972 – ஈரானைப் பெரும் பனிப்புயல் தாக்கியது. அடுத்த ஏழு நாட்களில் 4,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1984 – அமெரிக்காவில் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு பெண்ணில் இருந்து மற்றொருவருக்கு கருமாற்றம் வெற்றிகரமாக நிறைவேற்ரப்பட்டது.
1984 – சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் புரூஸ் மக்காண்ட்லெஸ், ராபர்ட் ஸ்டுவேர்ட் ஆகியோர் முதன் முதலாக விண்வெளியில் சுயாதீனமான நிலையில் நடந்து சாதனை படைத்தார்கள்.
1989 – பராகுவேயில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து 1954 இலிருந்து ஆட்சியிலிருந்த சர்வாதிகாரி அல்பிரெடோ ஸ்ட்ரோயெசுனர் பதவியிழந்தார்.
1998 – இத்தாலியில் தாழப் பறந்த விமானம் ஒன்று கம்பிவட ஊர்தியொன்றின் கம்பிகளை அறுத்ததில், 20 பேர் உயிரிழந்தனர்.
1998 – தம்பலகாமம் படுகொலைகள்: இலங்கை, தம்பலகாமம் என்ற கிராமத்தில் ஊர்காவல் படையினரின் சுற்றிவளைப்பின் போது சிறுவர்கள் உட்பட எட்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2006 – அல் சலாம் 98 என்ற எகிப்திய பயணிகள் கப்பலொன்று செங்கடலில் 1,721 பேருடன் மூழ்கியதில் 435 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.
2007 – பக்தாத் சந்தை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 135 பேர் கொல்லப்பட்டனர்.
2014 – மாஸ்கோ பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர், 29 மாணவரக்ள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
35 minute ago
42 minute ago