Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Ilango Bharathy / 2021 நவம்பர் 30 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1700: 8500 பேர் கொண்ட சுவீடன் படைகள் பாரிய ரஷ்ய படையை எஸ்டோனியாவின் நார்வா நகரில் தோற்டித்தன.
1782: அமெரிக்க புரட்சி யுத்தத்தில் அமெரிக்க, பிரித்தானிய பிரதிநிதிகள் பாரிஸில் முன்னோடி சமாதான ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.
1872: உலகின் முதலாவது சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது.
1908: அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சுரங்கமொன்றல் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தால் 154 பேர் பலி.
1934: நீராவி ரயிலொன்று முதல் தடவையாக உத்தியோகபூர்வமாக 100 மைல் வேகத்தை அடைந்தது.
1954: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் எரிகல்லொன்று வீடொன்றின் கூரைவழியாக வீழ்ந்து, உறங்கிக்கொண்டிருந்த பெண்ணொருவரை தாக்கியது. விண்ணிலிருந்து விழுந்த பொருளொன்றினால் மனிதர்களுக்கு காயம் ஏற்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட ஒரேயொரு சம்பவம் இது.
1966: பிரிட்டனிடமிருந்து பார்படோஸ் சுதந்திரம் பெற்றது.
1967: பிரிட்டனிடமிருந்து தெற்கு யேமன் குடியரசு சுதந்திரம் பெற்றது.
1967: பாகிஸ்தான் மக்கள் கட்சி ஸுல்பிகார் அலி பூட்டோவினால் உருவாக்கப்பட்டது.
1995: குவைத் மீதான குவைத் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட 'பாலைவனப் புயல்' யுத்தம் உத்தியோகபூர்வமாக முடிவுற்றது.
1999: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பூகோள மயமாக்கலுக்கு எதிரானோரின் ஆர்ப்பாட்டம் காரணமாக, உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டு ஆரம்ப வைபவம் ரத்து செய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago