Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 04, புதன்கிழமை
Janu / 2024 நவம்பர் 29 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1549 – திருத்தந்தைத் தேர்தல் (1549–50) ஆரம்பமானது.
1612 – சுவாலி என்ற இடத்தில் இன்றைய குஜராத் மாநிலத்தில் போர்த்துக்கீசருக்கும் கிழக்கிந்திய நிறுவன படைகளுக்குமிடையே இடம்பெற்ற போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
1732 – தெற்கு இத்தாலி, நாபொலியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,940 பேர் உயிரிழந்தனர்.
1807 – நெப்போலியப் படைகள் போர்த்துகலுக்கு முன்னேறியதை அடுத்து ஆறாம் யோவான் மன்னர் லிஸ்பனில் இருந்து அரச குடும்பத்தினருடன் வெளியேறி பிரேசிலுக்கு சென்றார்.
1830 – போலந்தில் உருசியாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.
1850 – புருசியா ஆத்திரியாவின் தலைமையில் செருமன் கூட்டமைப்பில் சேர சம்மதித்தது.
1855 – துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.
1877 – தாமசு ஆல்வா எடிசன் போனோகிராப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.
1890 – சப்பானில் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.
1899 – பார்சிலோனா கால்பந்துக் கழகம் அமைக்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: அல்பேனியா விடுவிக்கப்பட்டது.
1945 – யுகோசுலாவிய கூட்டு மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1947 – பாலத்தீனத்தைப் பிரிப்பதென ஐக்கிய நாடுகள் பொதுச் சபை முடிவெடுத்தது.
1950 – வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐ.நா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.
1963 – கனடிய விமானம் மொன்ட்ரியாலில் விபத்துக்குள்ளாகியதில் 118 பேர் உயிரிழந்தனர்.
1982 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சோவியத் படைகளை ஆப்கானித்தானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.
1986 – சுரிநாம் இராணுவம் மொய்வானா கிராமத்தைத் தாக்கி 39 பொதுமக்களைக் கொன்றது.
2006 – அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாக்கித்தான் வெற்றிகரமாக நடத்தியது.
2007: கரீபியன் பிராந்தியத்தின் மார்ட்டினிக் கரையோரத்தில் 7.4 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
1 hours ago