Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
Janu / 2023 நவம்பர் 21 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1272: இங்கிலாந்தில் மூன்றாம் ஹென்றி இறந்ததையடுத்து அவரின் மகன் எட்வர்ட்ஸ் மன்னரானார்.
1783: பாரிஸ் நகரில் ஜீன் பிரான்கோயிஸ் பிலாட்ரே டி ரோஸியரும் பிரான்ஸிஸ்கோ மார்கியூஸும் முதலாவது வெப்ப வாயு பலூன் பயணத்தை மேற்கொண்டனர்.
1877: தோமஸ் அல்வா எடிஸன் போர்னோகிராவ் ஒலிப்பதிவுக் கருவியை கண்டுபிடித்தமை குறித்து அறிவித்தார்.
1922: அமெரிக்காவில் ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த ரெபேக்கா லடிமேர் பெல்டன் எனும் பெண் அந்நாட்டின் முதலாவது செனட்டராக பதவிப்பிரமாணம் செய்தார்.
1942: அமெரிக்கப் பெருநிலப்பரப்பையும் கனடாவுக் ஊடாக அலாஸ்கா மாநிலத்தையும் இணைக்கும் 2000 கிலோமீற்றருக்கும் அதிக நீளமான அலாஸ்கா நெடுஞ்சாலை நிர்hமாணித்து முடிக்கப்பட்டது.
1962: சீன- இந்திய யுத்தத்தில் சீனா ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தம் செய்தது.
1971: பங்களாதேஷ் சுதந்திரப் போரில் முதல் சமர்களில் ஒனறான காரிபூர் சமரில் பாகிஸ்தான் படையினரை முக்திபாஹினி கெரில்லாக்களின் உதவியுடன் இந்திய படையினர் தோற்கடித்தனர்.
1979: பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகம் தீக்கிரையாக்கப்பட்டது. 5 பேர் பலி.
1980: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாநிலத்தில் கேளிக்கை விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 87 பேர் பலி.
1995: பொஸ்னியா-ஹேர்சகோவினா மோதல்களுக்கு சமாதான தீர்வுகாண சேர்பிய, குரோஷிய, பொஸ்னிய தலைவர்கள் அமெரிக்காவில் வைத்து இணங்கினர்.
1996: நேட்டோவில் இணையுமாறு பல்கேரியா,எஸ்டோனியா, லத்வியா, லிதுவேனியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா ஆகியவற்றுக்கு நேட்டோ அழைப்பு விடுத்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
09 Apr 2025