Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Ilango Bharathy / 2021 நவம்பர் 12 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
1905 : நோர்வே மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.
1918 : ஆஸ்திரியா குடியரசாகியது.
1927 : மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.
1927 : லியோன் திரொட்ஸ்கி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஜோசப் ஸ்டாலின் சோவியத்தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார்.
1928 : வெசுட்ரிஸ் என்ற பயணிகள் கப்பல் வர்ஜீனியாவில் மூழ்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 110 பேர் உயிரிழந்தனர்.
1940 : இரண்டாம் உலகப் போர் - காபோன் சண்டை முடிவுக்கு வந்தது. பிரெஞ்சுப் படைகள் காபோன், லிப்ரவில் நகரைக் கைப்பற்றின.
1941 : இரண்டாம் உலகப் போர் - செவஸ்தபோல் நகரில் சோவியத் போர்க் கப்பல் 'செர்வோனா உக்ரயீனா' மூழ்கடிக்கப்பட்டது.
1944 : இரண்டாம் உலகப் போர் - பிரித்தானியாவின் வான்படை ஜேர்மனியின் திர்பித்ஸ் போர்க்கப்பலை நோர்வே அருகில் குண்டுகள் வீசி மூழ்கடித்தது.
1948 : டோக்கியோவில் பன்னாட்டு போர்க் குற்றவாளிகளின் நீதிமன்றம் ஒன்று ஏழு ஜப்பானிய இராணுவ அதிகாரிகளுக்கு 2ஆம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது.
1956 : மொரோக்கோ, சூடான், தூனிசியா ஆகியன ஐநா வில் இணைந்தன.
1956 : சூயெஸ் நெருக்கடி - இஸ்ரேலிய படைகள் காசாக்கரையில் ராஃபா என்ற இடத்தில் 111 பாலத்தீன அகதிகளைச் சுட்டுக் கொன்றனர்.
1969 : வியட்நாம் போர் - மை லாய் படுகொலைகள் தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர் எர்ஸ் வெளியிட்டார்.
1970 : போலா சூறாவளி கிழக்குப் பாக்கிஸ்தானை (இன்றைய வங்காளதேசம்) தாக்கியதில் 500,000 பேர் வரை இறந்தனர்.
1975 : கொமொரோஸ் ஐநா வில் இணைந்தது.
1980 : நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.
1981 : கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது.
1982 : லியோனீது பிரெஸ்னேவ் இறந்ததை அடுத்து, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரராக யூரி அந்திரோப்பொவ் தெரிவு செய்யப்பட்டார்.
1982 : போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா பதினொரு மாத சிறைத்தண்டனைக்குப் பின்பு விடுதலையானார்.
1989 : தென்னிலங்கையின் உலப்பனையில் தனது தோட்ட வீட்டில் மறைந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் றோகண விஜேவீர கைதாகி மறுநாள் கொல்லப்பட்டார்.
1990 : இளவரசர் அக்கிகித்தோ ஜஜப்பானின் 125ஆவது பேரரசராக முடிசூடினார்.
1990 : இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை டிம் பேர்னேர்ஸ் - லீ அறிவித்தார்.
1991 : கிழக்குத் திமோர், டெல்லியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனேசிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர்.
1994 : இலங்கையின் 5ஆவது அரசுத் தலைவராக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.
1995 : குரோவாசிய விடுதலைப் போரை அமைதியாக முடிவுக்குக் கொண்டுவர எர்தூத் உடன்பாடு எட்டப்பட்டது.
1996 : சவூதி அரேபியாவின் போயிங் விமானமும் கசக்கஸ்தானின் இலியூசின் விமானமும் புது டெல்லிக்கு அருகில் நடுவானில் மோதிக் கொண்டதில் 349 பேர் உயிரிழந்தனர்.
1999 : துருக்கியின் வடமேற்கே இடம்பெற்ற 7.2 அளவு நிலநடுக்கத்தில் 845 பேர் உயிரிழந்தனர்.
2001 : நியூயோர்க் நகரில் டொமினிக்கன் குடியரசு நோக்கிச் சென்ற அமெரிக்க விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விபத்துக்குள்ளாகியதில், விமானத்தில் சென்ற 260 பேரும் தரையில் இருந்த 5 பேரும் கொல்லப்பட்டனர்.
2001 : ஆப்கானிஸ்தானில் வடக்குக் கூட்டணி படைகள் முன்னேறியதை அடுத்து, காபூல் நகரை விட்டு தலிபான் படைகள் முற்றாக விலகினர்.
2006 : முன்னாள் சோவியத் குடியரசான தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பை நடத்தியது.
2011 : ஈரானில் ஏவுகணைத் தளம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர்.
2014 : ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ரொசெட்டா விண்கலத்தில் இருந்து இறக்கப்பட்ட பிலே விண்கலம் 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளியில் தரையிறங்கியது.
2015 : பெய்ரூத் நகரில் இடம்பெற்ற இரண்டு தற்கொலைத் தாக்குதல்களில் 43 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் காயமடைந்தனர்.
2017 : ஈரானில் ஈராக் எல்லைப் பகுதியில் கெர்மான்சா மாகாணத்தில் இடம்பெற்ற 7.3 அளவு நிலநடுக்கத்தில் 500 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 8,100 பேர் காயமடைந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
47 minute ago
51 minute ago
56 minute ago