Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 09 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1913 : மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.
1921 : ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1937 : ஜப்பானியப் படைகள் சீனாவின் ஷாங்காய் நகரைக் கைப்பற்றினர்.
1938 : நாசி ஹிட்லரின் யூதப் பகைமைக் கொள்கையின் ஒரு பகுதியாக ஜேர்மனியில் கிறிஸ்டல் இரவு நிகழ்வு இடம்பெற்றது. 90 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 25,000 பேர் கைது செய்யப்பட்டு நாசி வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
1953 : கம்போடியா, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1963 : ஜப்பானில் மீக் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 458 பேர் கொல்லப்பட்டனர்.
1963 : ஜப்பான் யோகோஹாமா என்ற இடத்தில் மூன்று ரயில்கள் மோதி கொண்டதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
1967 : நாசா நிறுவனம் கேப் கென்னடி தளத்தில் இருந்து ஆளில்லா அப்பல்லோ 4 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
1985 : சதுரங்க உலகக்கிண்ணப் போட்டியில் காரி காஸ்பரொவ், அனத்தோலி கார்ப்பொவைத் தோற்கடித்து உலகின் முதலாவது வயது குறைந்த சதுரங்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
1989 : பனிப்போர் - கம்யூனிசக் கிழக்கு ஜேர்மனி பெர்லின் சுவரைத் திறந்து விட்டதில் பலர் மேற்கு ஜேர்மனிக்குள் செல்ல ஆரம்பித்தனர்.
1990 : நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
1994 : டார்ம்சிட்டாட்டியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
2000 : உத்தராஞ்சல் மாநிலம்இ இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
2005 : வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஐரோப்பாவின் விண்கலம் கசக்ஸ்தானில் இருந்து ஏவப்பட்டது.
2005 : ஜோர்தானின் அம்மான் நகரில் மூன்று விடுதிகளில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில், 56 பேர் கொல்லப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago