2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 29

Mithuna   / 2023 டிசெம்பர் 29 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: 3,500 பிரித்தானியப் போர்வீரர்கள் ஜோர்ஜியா மாநிலத்தின் சவான்னா நகரைக் கைப்பற்றினர்.

1835 – மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1845 – டெக்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28ஆவது மாநிலமாக இணைந்தது.

1851 – அமெரிக்காவின் முதலாவது இளைய கிறித்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பாஸ்டனில் அமைக்கப்பட்டது.

1874 – எசுப்பானியாவில் இராணுவப் புரட்சி தோல்வியடைந்ததை அடுத்து அங்கு மன்னராட்சி மீண்டும் கொண்டுவரப்பட்டது. 

1911 – மங்கோலியா சிங் சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றது. 

1930 – அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.

1937 – ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.

1940 – இரண்டாம் உலகப் போர்: லண்டன் நகரின் மேல் நாட்சி ஜெர்மனியின் வான்படைகள் தீக்குண்டுகளை வீசியதில் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1972 – புளோரிடாவில் மயாமி விமான நிலையத்தில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 101 பேர் உயிரிழந்தனர்.

1975 – நியூயோர்க் நகர லாகோர்தியா விமான நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டு 74 பேர் காயமடைந்தனர்.

1987 – 326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்.

1993 – உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஆங்காங்கில் அமைக்கப்பட்டது.

1996 – குவாத்தமாலாவில் அந்நாட்டு அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் 36-ஆண்டு கால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.

1997 – ஹொங்கொங்கில் கோழிகளுக்கு தொற்றுநோய் பரவியதை அடுத்து அங்கிருந்த 1.25 மில்லியன் கோழிகள் கொல்லப்பட்டன.

1998 – கம்போடியாவில் 1970களில் ஒரு மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு கெமர் ரூச் தலைவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.

2001 – பெருவின் தலைநகர் லீமாவில் பெரும் தீ பரவியதில் 274 பேர் உயிரிழந்தனர்.

2011 – சமோவா, டோக்கெலாவ் ஆகிய நாடுகள் புதிய நாள்காட்டியை அறிமுகப்படுத்தின. இதன்படி, டிசம்பர் 29 இற்கு அடுத்தநாள் டிசம்பர் 31 ஆக அறிவித்தன.

2013 – உருசியா, வோல்கோகிராட் தொடருந்து நிலையம் ஒன்றில் தற்கொலைக் குண்டு வெடித்ததில் 18 பேர் கொல்லபட்டனர்.

இறப்பு
2012 –தென்னாப்பிரிக்க- அவுத்திரேலிய துடுப்பாட்ட வீரரும் ஊடகவியலாளருமான டோனி கிரெய்க் காலமானார்.

2015 – தமிழண்ணல், தமிழறிஞர் இயற்கை எய்தினார்.

2020- இலங்கையில் அதிக வயது வரை வாழ்ந்த களுத்துறை-தொடங்கொட நேகின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 117 வயதுடைய வேலு அப்பானி என்ற மூதாட்டி உயிழிழந்தார். மேற்படி மூதாட்டி, ஆசியாவில் அதிக வயது வரை வாழ்ந்த இரண்டாவது பெண் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X