Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Ilango Bharathy / 2021 டிசெம்பர் 22 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
1885: இட்டோ ஹிரோபுமி எனும் சாமுராய் வீரர் ஜப்பானிய பிரதமரானார்.
1942:வி-2 ரக ரொக்ட்டுகளை ஆயுதமாக வடிவமைக்கும்படி அடோல்வ் ஹிட்லர் உத்தரவிட்டார்.
1944: பெல்ஜியத்தின் பஸ்டோன்ஜ் நகரில் அமெரிக்கத் துருப்புகளை சரணடையுமாறு ஜேர்மனிய துருப்புகள் கோரின.
1963: உல்லாசப் பயணக் கப்பலான லோகோனியா போர்த்துக்கலுக்குச் சொந்தமான மடேரியா தீவுக்கருகில் தீப்பற்றியதால் 128 பேர் பலி.
1965: 30 வருடங்களின் பின் பேர்லினின் பிரண்டன்பர்க் நுழைவாயில் திறக்கப்பட்டதன் மூலம் கிழக்கு, மேற்கு ஜேர்மனிகளின் பிரிவிணை முடிவுக்கு வந்தது.
2001: ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக பதவி வகித்த புர்ஹானனுதீன் ரபானி, ஜனாதிபதி ஹமீட் கர்ஸாயிடம் அதிகாரத்தை கையளித்தார்.
2001: அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணியான ரிச்சர்ட் ரீட் என்பவர் தனது பாதணிக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டை வெடிக்க வைக்க முயன்றபோது மடக்கிப்பிடிக்கப்பட்டார்.
2010: அமெரிக்க பாதுகாப்புப் படைகளில் ஓரின சேர்க்கையாளர்கள் சேவையாற்றுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கும் ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கையெழுத்திட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
28 minute ago