Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 21 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1768 – நேபாள இராச்சியம் உருவானது.
1872 – சலஞ்சர் ஆய்வுப் பயணம் இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத்தில் இருந்து ஆரம்பமானது.
1902 – இலங்கையில் பூர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
1907 – சிலியப் படையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 2,000 சுரங்கத் தொழிலாளர்களைப் படுகொலை செய்தனர்.
1913 – உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் புதிர் 'நியூயோர்க் வேர்ல்ட்' பத்திரிகையில் வெளியானது.
1919 – அரசியல் எதிர்ப்பாளர் எம்மா கோல்ட்மன் என்ற அமெரிக்கர் உருசியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
1923 – ஐக்கிய இராச்சியமும் நேபாளமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
1937 – உலகின் முதலாவது முழு -நீள இயங்குபடம் சினோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் வெளியிடப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: தாய்லாந்துக்கும் ஜப்பானுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1963 – சைப்பிரசில் துருக்கியர்களுக்கு எதிரான போராட்டம் தொடங்கியது.
1965 – அனைத்துவகை இனத்துவ பாகுப்பாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை அறுமுகப்படுத்தப்பட்டது.
1967 – உலகின் முதலாவது இருதயமாற்றுச் சிகிச்சை பெற்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லூயிசு நாசுகான்சுகி என்பவர் சிகிச்சை பெற்று 18 நாட்களின் பின்னர் இறந்தார்.
1968 – சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.
1970 – எப்-14 போர் விமானத்தின் முதலாவது பறப்பு மேற்கொள்ளப்பட்டது.
1973 – அரபு-இஸ்ரேல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஜெனீவா மாநாடு ஆரம்பமானது.
1979 – ரொடீசியாவின் விடுதலைக்கான உடன்பாடு லண்டனில் கையெழுத்திடப்பட்டது.
1988 – இசுக்காட்லாந்தில் லொக்கர்பி என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானத்தில் குண்டு வெடித்ததில் 270 பேர் கொல்லப்பட்டனர்.
1988 – உலகின் மிகப்பெரிய வானூர்தி அன்டனோவ் ஏ.என் 225 மிரியா பறக்க விடப்பட்டது.
1991 – கசக்ஸ்தானில் கூடிய பதினொரு சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி டிசம்பர் 26 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
1995 – பெத்லகேம் நகரம் இஸ்ரேலியர்களிடம் இருந்து பாலத்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
2004 – ஈராக் போர்: ஈராக்கின் மோசுல் நகரில் அமெரிக்கப் படைகள் மீதான தற்கொலைத் தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.
2007 – பாக்கித்தானில் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
2010 –ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் ஈழத்துப் பூராடனார் உயிரிழப்பு.
2018 –தமிழக எழுத்தாளரும் திறனாய்வாளமான பிரபஞ்சன் உயிரிழப்பு.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago