2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : டிசெம்பர் 18

Mithuna   / 2023 டிசெம்பர் 18 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1907 : அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 239 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1916 : முதலாம் உலகப் போர் - பிரான்சில் வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஜேர்மனியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.

1920 : முதலாம் கான்சுடண்டைன் கிரேக்கத்தின் மன்னராக முடிசூடினார்.

1927 : கக்கோரி தொடருந்துக் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ராம் பிரசாத் பிசுமில், அஷ்பகுல்லா கான், ரொசான் சிங் ஆகிய விடுதலைப் போராளிகள் பிரித்தானிய இந்திய அரசினால் தூக்கிலிடப்பட்டனர்.

1929 : இந்திய தேசிய காங்கிரசு இந்தியாவின் விடுதலையை அறிவித்தது.

1932 : பிபிசி உலக சேவை ஆரம்பமானது.

1941 : இரண்டாம் உலகப் போர் - ஹிட்லர் தன்னை ஜேர்மனியின் இராணுவத் தலைவராகத் தன்னை அறிவித்தார்.

1946 : முதலாவது இந்தோ - சீனப் போர் ஆரம்பமானது.

1961 :  போர்த்துக்கேயக் குடியேற்ற நாடான தமன் தியூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

1967 : இரு நாள்களின் முன்னர் கடலில் நீந்தும்போது காணாமல் போன ஆஸ்திரேலியப் பிரதமர் அரல்ட் ஓல்ட் இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

1972 : அப்பல்லோ திட்டம் - சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பூமி திரும்பியது.

1983 : உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியில் வழங்கப்படும் பரிசுக்கிண்ணம் பிரேசிலில் அந்நாட்டு காற்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது.

1984 :  ஆங்காங்கின் ஆட்சியை 1997 ஜூலை 1 இல் சீனாவிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டங் சியாவுபிங், பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கையெழுத்திடப்பட்டது.

1986 : சோவியத் எதிர்ப்பாளி ஆந்திரே சாகரவ் அவரது கோர்க்கி வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

1997 : சில்க் ஏர் விமானம் இந்தோனேசியாவில் பலெம்பாங் அருகே மூசி ஆற்றில் வீழ்ந்ததில் 104 பேர் உயிரிழந்தனர்.

1998 : அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் மீது கீழவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2000 : யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

2001 : அதியுயர் வளிமண்டல அழுத்தம்) மங்கோலியாவில் பதிவு செய்யப்பட்டது.

2013 : கையா விண்கலத்தை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஏவியது.

2016 : துருக்கிக்கான உருசியத் தூதர் அதிரேய் கார்லொவ் அங்காராவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X