Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Ilango Bharathy / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1782 – மொண்ட்கோல்பியர் சகோதரர்கள் ஆளில்லா வெப்பக்காற்று பலூனை முதன் முதலில் பிரான்சில் சோதித்தனர்.
1812 – உருசியா மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவுக்கு வந்தது
1845 – ஆங்கிலேய-சீக்கியப் போர் ஆரம்பமானது.
1899 – யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்றது.
1903 – அமெரிக்காவின் வட கரொலினா மாநிலத்தில் ரைட் சகோதரர்கள் தமது ரைட் பிளையர் வானூர்தியை முதல் தடவையாக சோதித்தனர்.
1918 – செருமனிய இளவரசர் பிரீட்ரிக்கு கார்ல் வொன் எசென் முதலாம் வைனோ என்ற பெயரில் பின்லாந்து மன்னராக அந்நாட்டு நாடாளுமன்றம் தெரிவு செய்தது.
1918 – போர்த்துகல் அரசுத் தலைவர் சிதோனியோ பாயிசு கொல்லப்பட்டார்.
1918 – ஐக்கிய இராச்சியத்தில் முதல் தடவையாக பெண்கள் நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் தாய்லாந்துடன் இணைந்து போரிட உடன்பட்டது.
1946 – ஐ.நாவின் தலைமையகத்தை நியூயோர்க் நகரில் அமைக்க முடிவாகியது.
1955 – அல்பேனியா, ஆஸ்திரியா, பல்காரியா, கம்போடியா, இலங்கை, பின்லாந்து, அங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, யோர்தான், லாவோசு, லிபியா, நேபாளம், போர்த்துகல், உருமேனியா, எசுப்பானியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தன.
1962 – நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளிக் கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.
1981 – அரபு-இஸ்ரேல் முரண்பாடு: இசுரேலின் நாடாளுமன்றம் ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்றுகளில் இசுரேலியச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
2003 – சதாம் உசேன் கைப்பற்றப்பட்ட செய்தியை அமெரிக்கத் தலைவர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
2003 – பாக்கித்தான் அரசுத் தலைவர் பர்வேஸ் முசாரப் கொலை முயற்சி ஒன்றிலிருந்து உயிர் தப்பினார்.
2004 – தெற்கு பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிக உயர்ந்த பாலம் திறக்கப்பட்டது.
2012 – அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் சாண்டி ஊக் தொடக்கப்பள்ளியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
28 minute ago