2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : டிசெம்பர் 11

Mithuna   / 2023 டிசெம்பர் 11 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1905 : உக்ரைன் கீவ் (அன்றைய ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதி) நகரில் தொழிலாளர்களின் கிளர்ச்சி ஆரம்பமானது. சூலியாவ்க்கா குடியரசு உருவானது.

1907 : நியூசிலாந்தின் நாடாளுமன்றக் கட்டடம் முற்றாகத் தீக்கிரையானது.

1917 : முதல் உலகப் போர் -  பிரித்தானியத் தளபதி எட்மண்ட் அலென்பி ஜெருசலேம் நகரை நடந்து சென்றடைந்து அங்கு இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார்.

1927 : கம்யூனிஸ செம்படையினர் சீனாவின் குவாங்சௌவில் கிளர்ச்சியை ஏற்படுத்தி,  நகரின் பெரும் பகுதியைக் கைப்பற்றி குவாங்சௌ சோவியத்தை அறிவித்தார்கள்.

1931 : அவுஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய மேலாட்சி அரசுகளுக்குத் தமது முழுமையான அரசியலமைப்புகளைப் பேணும் சட்டமூலம் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

1936 : ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் எட்டாம் எட்வர்டு முடி துறந்தார்.

1937 : எஸ்தோனியாத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் ஸ்டாலின் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

1937 : இத்தாலி உலக நாடுகள் சங்கத்தில் இருந்து வெளியேறியது.

1941 : இரண்டாம் உலகப் போர் -  பேர்ள் துறைமுகத் தாக்குதலை அடுத்து அமெரிக்கா ஜப்பானியப் பேரரசு மீது போரை அறிவித்ததை அடுத்து ஜேர்மனி, இத்தாலி ஆகியன அமெரிக்கா மீது போரை அறிவித்தன.

1941 : இரண்டாம் உலகப் போர் - போலந்து ஜப்பானியப் பேரரசு மீது போரை அறிவித்தது.

1946 : ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அமைக்கப்பட்டது.

1958 : அப்பர் வோல்ட்டா பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1962 : கனடாவில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றபட்டது.

1964 : சே குவேரா ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.

1972 : அப்பல்லோ 17 சந்திரனில் இறங்கியது. இதுவே நிலாவில் இறங்கிய ஆறாவதும்இ கடைசியுமான அப்பல்லோ திட்டம் ஆகும்.

1981 : எல் சல்வடோரில் இராணுவத்தினர் உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட 900 பொதுமக்களை கொன்றனர்.

1990 : அல்பேனியாவில் மாணவர்கள், தொழிலாளர்களின் போராட்டங்கள் ஆரம்பமானது. இதுவே காலப்போக்கில் அல்பேனியாவில் பொதுவுடைமை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

1993 : மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உயர்மாடிக் கட்டடம் ஒன்று வீழ்ந்ததில், 48 பேர் கொல்லப்பட்டனர்.

1994 : ரஷ்யப் படைகள் செச்சினியாவில் ஊடுருவ ரஷ்ய அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் ஆணையிட்டார்.

1998 : தாய்லாந்தைச் சேர்ந்த விமானம் வீழ்ந்ததில், 101 பேர் உயிரிழந்தனர்.

2001 : சீனா உலக வணிக அமைப்பில் இணைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X