Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 05 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1933 : யூட்டா 36ஆவது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
1934 : இத்தாலியப் படைகள் அபிசீனியாவின் வால் வால் நகரத்தைத் தாக்கினர்.
1936 : சோவியத் ஒன்றியம் தனது புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்தியது. கிர்கிஸ்தான் சோவியத் ஒன்றியத்திற்குள் முழுமையான குடியரசாக அறிவிக்கப்பட்டது.
1941 : இரண்டாம் உலகப் போர் – பின்லாந்து, ஹங்கேரி, ருமேனியா நாடுகளின் மீது பிரித்தானியா போரை அறிவித்தது.
1941 : இரண்டாம் உலகப் போர் - கியோர்கி சூக்கொவ் தலைமையில் சோவியத் படைகள் ஜேர்மனிய ஆக்கிரமிப்புக்க்கு எதிராக மாஸ்கோவில் பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.
1952 : இலண்டனில் ஏற்பட்ட பெரும் புகைமாசுப் பேரிடர் காரணமாக, 12,000 பேர் உயிரிழந்தனர். 200,000 பேர் வரை பாதிக்கப்பட்டனர்.
1957 : இந்தோனேசியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
1958 : STD தொலைபேசி இணைப்பு சேவை ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.
1969 : அமெரிக்க படைத்துறை உயர் ஆய்வு நிறுவனத்தால் இணையம் நிறைவேறியது.
1969 : மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது.
1978 : சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
1983 : ஆர்ஜெண்டீனாவில் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.
1995 : இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் முழுமையாகக் கைப்பற்றியதாக அறிவித்தது.
2003 : தெற்கு ரஷ்யாவில் ரயில் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டனர்.
2003 : இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர் திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது.
2006 : பிஜியில் இராணுவப் புரட்சி மூலம் அதன் இராணுவத் தளபதி வொரெக் பைனிமரமா அரசைக் கைப்பற்றினார்.
2006 : இந்திய நடுவண் அரசில் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த சிபு சோரன் 1994 இல் அவரது உதவியாளரைக் கொலை செய்த குற்றத்துக்காக, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
09 Apr 2025