Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 16 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1598 – கொரிய, ஜப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற நோர்யாங் சமரில் கொரியா வெற்றி பெற்றது.
1653 – சேர் ஆலிவர் கிராம்வெல் பொதுநலவாய இங்கிலாந்து, ஸ்n;காட்லாந்து, அயர்லாந்து நாடுகளின் தலைவரானார்.
1707 – ஜப்பானின் பூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.
1811 – அமெரிக்காவின் மிசூரியில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
1835 – நியூயோர்க் நகரத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் 530 கட்டிடங்கள் சேதமடைந்தன.
1857 – இத்தாலியின் நேப்பில்சில் இடம்பெற்ற 6.9 நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1880 – முதல் பூவர் போர்: தென்னாப்பிரிக்காவின் பூவர்களுக்கும் பிரித்தானியப் பேரரசுக்கும் இடையில் போர் மூண்டது.
1918 – இலித்துவேனிய சோவியத் சோசலிசக் குடியரசு அமைக்கப்பட்டது. இது 1919 இல் கலைந்தது.
1920 – சீனாவில் கான்சு நகரில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் கொல்லப்பட்டனர்.
1922 – போலந்து அரசுத்தலைவர் கேப்ரியல் நருடோவிச் வார்சாவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1925 – இலங்கை வானொலியின் ஒலிபரப்பு சேவை ஆரம்பமானது.
1947 – வில்லியம் ஷாக்லி, ஜான் பார்டீன், வால்டர் பிராட்டன் ஆகியோர் இணைந்து உலகின் முதலாவது செயல் முறை திரிதடையத்தை உருவாக்கினர்.
1971 – வங்காளதேச விடுதலைப் போர், 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தானிய இராணுவம் சரணடைந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது. இந்நாள் வங்காள தேசத்திலும், இந்தியாவிலும் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1971 – பஹரைன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1991 – கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
2000 – அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தை சூறாவளி தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்,
2013 – பிலிப்பீன்சு தலைநகர் மணிலாவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
2014 – பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான் போராளிகள் பெசாவர் நகரில் இராணுவப் பள்ளுக்கூடம் ஒன்றில் தாக்குதல் நடத்தியதில் 145 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பாடசாலைச் சிறுவர்கள் ஆவர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
36 minute ago
43 minute ago